இளம் தாய் ஒருவரின் மிக மோசமான செயல்! குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்த அவலம்

Report Print Murali Murali in சமூகம்
281Shares

குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்த இளம் தாய் ஒருவரை பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

இந்த சம்பவம், மோதர-அலுத்மாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஒன்றரை மாத குழந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குழந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி, குறித்த பெண் நேற்றிரவு குழந்தையை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.

பொருளாதார பிரச்சினைகள் மற்றும் கணவருடனான தகராறு காரணமாக அந்த பெண் தனது மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 28 வயதான குறித்த இளம் தாயை கைது செய்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.