சர்வதேச நாடுகளின் பொலிஸ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை பொலிஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
சர்வதேச பொலிஸ் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் பிரின்ஸ்டன் நகரில் இன்றைய தினம் நடைபெற்றது.
இதில் இலங்கை பொலிஸ் அணியும் மேற்கு அவுஸ்திரேலிய பொலிஸ் அணியும் கலந்து கொண்டிருந்தன. போட்டி முடிவில் இலங்கை பொலிஸ் அணி வெற்றி பெற்று உலகக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது.
சர்வதேச பொலிஸ் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் ஆசிய நாடொன்றின் பொலிஸ் அணி வெற்றி பெற்றுள்ளமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.