ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் நல்லை ஆதீனம் பகுதிக்கு விஜயம்

Report Print Dias Dias in சமூகம்

சமய அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் அஹமட் சஹீட் மற்றும் குழுவினர் நல்லை ஆதீனம், சின்மியா மிஷன், சைவ மகா சபை பிரதிநிதிகளை இன்று சந்தித்துள்ளனர்.

இதன்போது சைவத் தமிழர்களின் சமகால கரிசனைகள் தொடர்பாகவும், சைவத் தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பாகவும், வழிபாட்டிடங்கள் மற்றும் மரபுரிமை சார்ந்த வரலாற்று இடங்கள் அடையாளங்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும், அவற்றை ஐநாவின் கவனத்திற்கு கொண்டு சென்று எதிர்கொள்ளும் வகைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலுக்கு முன்னர் குழுவினர் நல்லூர் கந்த சுவாமி கோவிலில் வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers