இலங்கையில் நடிகர் ஒருவரின் மோசமான செயற்பாடு!

Report Print Vethu Vethu in சமூகம்
574Shares

பாணந்துறையில் 13 முச்சக்கர வண்டிகளை திருடிய நடிகர் ஒருவர் மற்றும் அவருக்கு உதவிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு பூராகவும் முச்சக்கர வண்டி திருடி போலி இலக்க தகடு, நிறத்தை மாற்றி அதனை விற்பனை செய்யும் நடவடிக்கையில் இந்த கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது.

இந்த கும்பலை சேர்ந்த மேலும் இருவர் பாணந்துறையில் சுற்றித் திரிவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த நடிகர் முச்சக்கர வண்டி ஒன்றுடன் சென்றுள்ளார்.

கஹதுடுவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் திருமணமான 39 வயதுடையவராகும். இவர்கள் குழுவாக இணைந்து பாணந்துரை, பண்டாரகம, கஹதுடுவ, ஹொரனை, பதுரலிய, மத்துகம ஆகிய பல்வேறு பிரசேதங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.