முத்தம் கொடுக்க மறுத்த பாடசாலை மாணவனை கொடூரமாக தாக்கிய நபர்

Report Print Vethu Vethu in சமூகம்
904Shares

புத்தளத்தில் முத்தம் கொடுக்க மறுத்த பாடசாலை மாணவனை, நபர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனமடுவ, ஆடிகம நகரத்திற்கு குடிபோதையில் வந்த நபர் ஒருவர், இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் இருவரிடம் முத்தம் வழங்குமாறு கோரியுள்ளார்.

எனினும் மாணவர்களை முத்தம் வழங்க மறுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த குறித்த நபர் பாடசாலை மாணவன் ஒருவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிடீவி கமராவில் பதிவாகியுள்ளது. எனினும் இந்த தாக்குதலுக்கு எதிராக மிகவும் மந்தமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.