திருகோணமலை - சீனக்குடா பகுதியில் தங்கையை தாக்கி காயப்படுத்திய அண்ணனை சீனக்குடா பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தீவரகம்மானை, இரண்டாம் பியவர, சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்வியில் ஆர்வம் செலுத்தாமல் இளைஞரொருவரை காதலித்து வந்துள்ள நிலையிலேயே தங்கையை அண்ணன் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காயங்களுக்குள்ளான தங்கை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.