பளை வைத்தியசாலையின் வைத்தியர் திடீர் கைது

Report Print Suman Suman in சமூகம்

பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை ஞாயிறு இரவு இடம்பெற்றிருப்பதாக தெரியவருகின்றது.

பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி சிவரூபன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்

இவர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் குறித்த வைத்தியர் தேடப்பட்ட ஒருவர் எனத் பயங்கரவாத தடுப்ப பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பயங்கரவாத விசாரணை பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.