காலிமுகத்திடல் தொடக்கம் லோட்டஸ் வீதி வரை போக்குவரத்துத் தடை

Report Print Aasim in சமூகம்

கொழும்பு காலிமுகத்திடல் தொடக்கம் லோட்டஸ் வீதி வரையான வீதி தற்காலிகமாக போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.

அங்கவீனமுற்ற இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாகவே பொலிஸார் குறித்த வீதியில் போக்குவரத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தி வீதியை மூடியுள்ளனர்.

ஓய்வூதிய உயர்வு, நிரந்தர இராணுவத்தினருக்கு கிடைக்கும் சலுகைகள் தமக்கும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அங்கவீனமுற்ற இராணுவத்தினர் கடந்த நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினமும் அவர்கள் லோட்டஸ் வீதி ஊடாக சென்று ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட முயற்சித்த போது அப்பிரதேச வீதி ஊடான போக்குவரத்து தடைசெய்யப்பட்டு வீதித்தடைகள் இட்டு பொலிஸார் லோட்டஸ் வீதியை தற்காலிகமாக மூடியுள்ளனர்.

எனினும், அங்கவீனமுற்ற இராணுவத்தினர் வீதியில் அமர்ந்து தொடர்ந்தும் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.