கொம்பனி வீதி கொலைச் சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

Report Print Aasim in சமூகம்
58Shares

கொம்பனி வீதியில் அழகு நிலையம் ஒன்றில் நடைபெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேகநபர்களும் இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களை இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் அடையாள அணிவகுப்பு நடைபெறவில்லை.

இதனையடுத்து, சந்தேகநபர்களை எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.