திருகோணமலை - மூதூர், புளியடிச் சந்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுரம் செயலிழந்துள்ளது.
மூதூர் பிரதான வீதியின் நாற் சந்தியில் அமைந்துள்ள இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தில் டிஜிட்டல் முறையில் இயங்கும் மணிக்கூடுகள் பொருத்தப்பட்டிருந்தன.
எனினும், தற்போது அந்த மணிக்கூடுகள் இயங்காத நிலையில் காணப்படுவதால் அதனை புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வீதி வழியாக பயணிக்கும் மக்களின் நலன்கருதி மணிக்கூடுகளைத் திருத்துவதற்கு உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.