புல்மோட்டையில் பணப்பையை திருடிய நபருக்கு நேர்ந்த கதி

Report Print Mubarak in சமூகம்
79Shares

திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் பணப்பை ஒன்றை திருடிய நபரை பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.

திருகோணமலை பயணிகள் பேருந்தில் இன்று காலை பயணி ஒருவரின் பணப்பையை நபர் ஒருவர் திருடி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருடிய நபர் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையர் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.