கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் தற்போது போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது.
வடக்கில் யாழ்ப்பாணத்தில் குருநகர் பகுதியில் 30 வருடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அழிவடைந்திருக்கும் வடகடல் நிறுவனத்தின் தலைமையகத்தை புனரமைத்து தருமாறுக் கோரி வடகடல் நிறுவனத்தினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளதுடன் பொலிஸாரும் அங்கு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.