மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் வேட்பாளருக்கே வாக்குகள்!

Report Print Theesan in சமூகம்
25Shares

தேர்தல் வரும் வேளையில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வேட்பாளருக்கு எமது வாக்குகளை அளிப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என மீனவச் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள்,

நீண்டகாலமாக எமது இந்தப் பிரச்சினைகளை அரச அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் மற்றும் பொறுப்புமிக்கவர்களிடம் கொண்டு சென்றபோதிலும் இதுவரை இதற்கான எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்கவில்லை.

ஆகவே, தேர்தல் வருகின்ற இந்த காலத்தில் ஊடக சந்திப்பினூடாக இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றும் வடபகுதி அரசியல்வாதிகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.

அதேநேரம் மக்களுக்கு மீளவும் இந்தக் காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த அரசாங்கம் பொறுப்பிற்கு வந்த சில காணிகளை விடுவித்தாலும் மறுபுறம் இராணுவத்தினால் பல காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தலின் போது எமது சமூகத்துடன் இணைந்து மீனவர்கள் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று மேலும் தெரிவித்துள்ளனர்.

இச்சந்திப்பில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வடமாகாண கடற்தொழிலாளர்கள் இணையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் என்பனவற்றின் தலைவர்கள் கலந்துகொண்டு தமது மாவட்டத்தின் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.