யாழ்.கொக்குவில் பகுதியில் உணவகம் ஒன்றின் மீது தாக்குதல்

Report Print Sumi in சமூகம்
117Shares

யாழ்.கொக்குவில் - பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணகவத்தில் அடையாளந்தெரியாத குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு குறித்த உணவத்திற்குள் புகுந்த அடையாளந்தெரியாத நபர்கள் அங்கு தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது, உணவக உரிமையாளர் காயமடைந்துள்ளதுடன், அங்கிருந்த பெறுமதியான பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.