வவுனியா - கருங்காலிக்குளம் பாடசாலையில் நூலகத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - கள்ளிகுளம், கருங்காலிக்குளம் பாடசாலையில் நூலகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

பாடசாலை வளாகத்தில் இன்று காலை சிறிசபாரத்தினம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் போரால் பல பாதிப்புகளை சந்தித்து மீள்குடியேறியுள்ள மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் நோக்குடன் 3 இலட்சம் ரூபாய் செலவில் இந்நூலகம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் அறக்கட்டளையின் சர்வதேச இணைப்பாளர் எ.நித்தியானந்தன், இலங்கைக்கான தலைவர் கென்றி மகேந்திரன், ஆலோசகர் சபாநாதன், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.