சஹ்ரானின் மேலும் இரு சகாக்கள் கைது

Report Print Aasim in சமூகம்
134Shares

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் கும்பலின் இலங்கை முகவர் சஹ்ரான் ஹாசிமின் மேலும் இரு சகாக்கள் அம்பாறை புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சஹ்ரான் ஹாசிமினால் நடத்தப்பட்ட நுவரெலியா பயிற்சி முகாமில் கலந்து கொண்டு இவர்கள் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், இயக்கத்தினால் புனைப் பெயரும் சூட்டப்பட்டுள்ளனர்.

கண்டிப் பிரதேசத்தில் உள்ள முருதகஹமுல, கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த மொஹம்மத் சாஹிர் மொஹம்மத் அஹ்சன் என்ற பெயருடைய நபருக்கு பயிற்சியின் பின்னர் அபூஅமாரா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மற்றைய நபர் காலிப் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மொஹம்மத் அவுதான் அனீஸ் மொஹம்மத் என்பவருக்கு அபூசுபைர் என்ற இயக்கப் பெயர் உள்ளது என்றும் அறியப்பட்டுள்ளது.

தேசியப் புலனாய்வுச் சேவையின் அம்பாறைப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவல்களையடுத்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இவர்களுடன் சேர்த்து மொத்தம் 15 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.