மட்டக்களப்பில் அத்துரலியே ரதன தேரர் தலைமையில் பேரணி

Report Print Navoj in சமூகம்

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தினை அரசுடைமையாக்க கோரி மட்டக்களப்பில் இன்று மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - கோட்டைமுனை, இந்துக்கல்லூரி விளையாட்டுக் கழகத்திற்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தலைமையில் இந்த பேரணி ஆரம்பமாகியிருந்தது.

குறித்த பேரணி மட்டக்களப்பு காந்தி பூங்கா வந்தடைந்ததையடுத்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது, மட்டக்களப்பு பல்கலைகழகத்தை அரச உடைமையாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டும் என கோசங்கள் எழுப்பப்பட்டன.

அத்துடன் குறித்த பல்கலைக்கழகம் தொடர்பில் முறையான விசாரணைகள் செய்யப்பட்டு சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த பேரணியில் 200இற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டம் மட்டக்களப்பு - கிரானில் நடைபெற இருந்த போதிலும் கோட்டைமுனையில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - குமார்