யாழில், பின்தங்கிய பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட நிதியை இடைமறித்த விஜயகலா! கடும் வேதனையில் மக்கள்

Report Print Jeslin Jeslin in சமூகம்

யாழ். மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு கம்பெரலிய திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட நிதியை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இடைநிறுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

யாழ். வடமராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தும்பளை, கற்கோவளம், வள்ளிபுரம் போன்ற பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட நிதியே இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளன.

கம்பெரலிய திட்டத்தின் மூலம் குறித்த கிராமங்களின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதியை வழங்காமல் இடைநிறுத்தியுள்ளமை அப்பகுதி மக்களை மேலும் இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது.

நீண்ட நாட்கள் அபிவிருத்தி செய்யப்படாத குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வாறு மக்களுக்கு வழங்கப்படுகின்ற நிதி உரியவாறு மக்களுக்கு கிடைக்காமல் செல்வதற்கும் அபிவிருத்திகள் தடைப்படுவதற்கும் மக்கள் பிரதிநிதிகளே வழிசமைத்து கொடுப்பதும், அல்லது அவர்களே இவை அனைத்திற்கும் தடையாக இருப்பதும் கவலைக்குரியது என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.