கைதான பளை வைத்திய அதிகாரி ரி.ஐ.டியின் தீவிர விசாரணைக்குள்

Report Print Rakesh in சமூகம்
288Shares

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பளை வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி வைத்தியர் சின்னையா சிவரூபன் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இவ்வாறு வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் சட்டவிரோதமான முறையில் தன்வசம் ஆயுதம் வைத்திருந்தார், தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கத்துக்கான பிரதான செயற்பாடுகளில் ஈடுபட்டார் மற்றும் பிரமுகர் ஒருவரைக் கொலை செய்யத் திட்டம் வகுத்திருந்தார் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார் பொலிஸ் தரப்பால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.