காஞ்சிபானி இம்ரானுடன் பிறந்த நாள் கொண்டாடிய அதிகாரிகள்

Report Print Ajith Ajith in சமூகம்

பாதாள உலகத்துடன் தொடர்புடைய நபரான காஞ்சிபானி இம்ரானுடன் தொடர்புகளை பேணியதாக கூறப்படும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் (சி.சி.டி) மூன்று துணை ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர்கள் மூவரும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபானி இம்ரான் கடந்த பெப்ரவரி மாதம் 5ம் திகதி துபாயில் நடந்த ஒரு விருந்தில் கைது செய்யப்பட்டார்.

இம்ரான் குறித்த குற்றப்புலனாய்வு அதிகாரிகளுடன் பிறந்தநாளை கொண்டாடியதாகவே அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.