யாழில் இருந்து ஆரம்பமாகின்றது நேரடி விமான சேவை!

Report Print Murali Murali in சமூகம்

யாழ். பலாலி விமான நிலையத்தில் இருந்து ஒக்டோபர் நடுப்பகுதியில் நேரடி விமான சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 80 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்களை இயக்கும் வகையில் இந்த விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும்.

விமான நிலைய முனையக் கட்டடம், விமான தரிப்பிடத் தொகுதி, கட்டுப்பாட்டுக் கோபுரம், மற்றும் விமான ஒடுதளம் ஆகியவற்றை அமைக்கும் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பயணிகள் விமானங்களை இயக்குவதற்கு ஏற்றவாறு, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும், இது பிராந்திய விமான நிலையமாக பயன்படுத்தப்படும். ஒக்டோபர் நடுப்பகுதியில் இந்த விமான நிலையம் பயணிகள் போக்குவரத்துக்கு தயாராகி விடும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.