கொழும்பு பிரதான வீதியில் வாகன விபத்தில் இளைஞனொருவர் பரிதாபமாக பலி

Report Print Gokulan Gokulan in சமூகம்
428Shares

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞனொருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இன்று ஹட்டன், கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் நுவரெலியா பகுதியை சேர்ந்த 22 வயதுடைய எம்.பி.அஸ்வின் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கார் சாரதி ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதோடு, சந்தேக நபரை நாளையதினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.