பிரதமரின் திருகோணமலை விஜயம் தொடர்பில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில்

Report Print Mubarak in சமூகம்
73Shares

பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருகோணமலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதை அடுத்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகள் கொண்ட பாதுகாப்பு குழுவினர் குறித்த இடங்களை இன்று பார்வையிட்டுள்ளனர்.

பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தலைமையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள இடங்களே இவ்வாறு பார்வையிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24ம் திகதி பிரதமர் திருகோணமலைக்கு விஜயம் செய்து பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.

திருகோணமலை, மட்டக்களப்பு பிரதான வீதி 30 கிலோ மீற்றர், கந்தளாய் சீனி தொழிற்சாலை வீதி 07 கிலோ மீற்றர், பாலத்தோப்பூர் பள்ளிக் குடியிருப்பு வீதி 07 கிலோ மீற்றர் போன்ற வீதிகள் காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதன்போது பிரதமர் அலுவலகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் ஜேசுதாசன், ஐபிரஜெக்ட் திட்ட பொறியியலாளர் சுரேந்திர குமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.