சந்தையில் மலியும் தரமற்ற பொலித்தீன் பொருட்கள்

Report Print Ajith Ajith in சமூகம்

தரமற்ற பொலிதீன் பொருட்கள் இன்னும் சந்தையில் கிடைக்கப்பெறுவதாக பொலிதீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள்சுழற்சி சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை சோதனைகளை முறையாக நடத்தாமையே இந்த நிலைமைக்கு காரணம் என சங்கத்தின் செயலாளர் அனுர ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனினும் இக்கருத்து குறித்து மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் புலனாய்வு பிரிவின் இயக்குநர் என்.எஸ். கமகே பதிலளித்துள்ளார்.

குறித்த தரமற்ற பொலிதீன் தயாரிப்புகள் மீதான சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.