பகிடிவதையின் பேரால் பாலியல் வதைபுரிந்த பல்கலை மாணவர்கள்

Report Print Aasim in சமூகம்

பகிடிவதையின் பேரால் புதிய மாணவர் ஒருவருக்கு பாலியல் வதை செய்த ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய முக்கியஸ்தர்கள் 19 பேரே இவ்வாறு கைது செய்ய்பபட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த புதிய மாணவர் ஒருவரை பல்கலைக்கழக விடுதிக்குள் வைத்து பகிடி வதை என்ற பேரில் பாலியல் வதை செய்ததாக அந்த மாணவர் முதலில் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பின்னர் ஊடவியலாளர் சந்திப்பொன்றின் மூலமும் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதனையடுத்து கைது செய்ய்பபட்ட மாணவர்கள் 19 பேரும் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.