சர்வதேச கவனத்தை எட்டவுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் மனித உரிமை மீறல்கள்

Report Print Kaviyan in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், அதற்கான காரணங்கள், அதற்குப் பின்னணியிலுள்ளவர்கள் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி கலந்துரையாடல் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்களுடன் டி.ஆர்.ஐ கலந்துரையாடி தரவுகளைத் திரட்டியுள்ளன.

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்களால் கிளிநொச்சியில் இடம்பெற்றுவரும் பல்வேறுபட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் டி.ஆர்.ஐ யிடம் ஆதாரபூர்வமான தரவுகள், தகவல்களை வழங்கியிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களால் ஏற்படும் பிரச்சினைகள், மனித உரிமை மீறல்கள், தொழில் நிறுவனங்களால் பெண்களை நாள்முழுக்க நின்ற நிலையில் வைத்து வேலை வாங்கி அவர்களது மனித உரிமைகளை மீறும் செயற்பாடுகள், இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள மக்களது, மக்கள் சேவை நிலையங்கள், மக்கள் தொழில் புரியும் பண்ணைகளுக்குச் சொந்தமான நிலங்கள், மண் கொள்ளைகள், மரக்கடத்தல்கள், சட்டவிரோத மது உற்பத்தி, சமூகவிரோதச் செயற்பாடுகளில் காவலர்களின் ஆதரவு, காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களது மனித உரிமை தொடர்ச்சியாக மீறப்படுதல், விசாரணை, விடுதலையற்ற நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

அரசியல் கைதிகளது குடும்பங்களின் நிலை, கலாசாரச் சீரழிவுகள், பௌத்த மத ஆக்கிரமிப்புக்களால் ஏற்படும் மீறல்கள் போன்ற பல்வேறு வழிகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்களால் ஆதாரங்களுடன் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி கலந்துரையாடலின் போது மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான கருத்துக்களை டி.ஆர்.ஐ பதிவு செய்திருந்தமையும், இக்கருத்துக்கள் சர்வதேச கவனத்தை எட்டும் வகையில் செல்லவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.