பிரபல வர்த்தகரின் வீட்டுக்குள் வாளோடு புகுந்த கொள்ளையர்கள்! மடக்கிப் பிடித்த பொது மக்கள்

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்
1028Shares

மல்வானை பகுதியிலுள்ள பிரபல வர்த்தகரின் வீட்டிற்குள் வாள்களுடன் புகுந்து கொள்ளையிட முயற்சித்த கும்பலை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று இரவு பத்து மணியளவில் குறித்த கும்பல் முஸ்லிம் வர்த்தகரின் வீட்டில் கொள்ளையிடுவதற்காக சென்றுள்ளனர். இதனை கண்காணித்த அக்கம் பக்கத்தினர் கொள்ளையர்களை விரட்டிச் சென்றதுடன் சிலரை பிடித்துள்ளனர்.

ஆறுபேருக்கும் அதிகமானவர்கள் இக்கும்பலில் இருந்ததாகவும் அதில் 3பேரை பொது மக்கள் மடக்கிப் பிடித்துள்ளதுடன் அவர்களை டொம்பே மற்றும் பியகம பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பிடிபட்டவர்கள் கூரிய ஆயுதங்கள் மற்றும் வாள்களை கொண்டுவந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.