அறுவக்காடு பகுதிக்கு குப்பைகளை ஏற்றிச்சென்ற வாகனங்கள் மீது கல் வீச்சு தாக்குதல்

Report Print Kanmani in சமூகம்
76Shares

கொழும்பில் இருந்து அறுவக்காடு குப்பை சேகரிப்பு பகுதிக்கு குப்பைகளை ஏற்றிச்சென்ற டிப்பர் வண்டிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் – மன்னார் பிரதான வீதியில் இன்று அதிகாலை மூன்று டிப்பர் வண்டிகள் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறுவக்காடு பகுதிக்குள் குப்பைகளை கொண்டு வருவதற்கு மக்கள் பல்வேறு சந்தர்பங்களில் பல எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.