பொகவந்தலாவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனித எச்சங்கள் மீட்பு

Report Print Kanmani in சமூகம்

ஹட்டன் - பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ சீனாகொலை பூசாரி பிரிவு பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் கையடக்க தொலைபேசி ஒன்றை இனங்கண்ட பொதுக்கள் கையடக்க தொலைபேசியினை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தொலைபேசியில் உள்ள தகவல்களுக்கு அமைய ஆரம்பிக்கபட்ட விசாரணைகளின் போது குறித்த மலை பகுதியில் மனித எச்சங்களை இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டபகுதியில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்படும் நபரொருவரினதாக இருக்கக் கூடுமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மனித எச்சங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.