தற்கொலை குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு உதவி

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ள சிறுவர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு

இன்று காலை நடைபெற்றது.

சிரேஷ்ட அரச உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் விஜய டி சில்வா, மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது குண்டு வெடிப்பில் தாய் தந்தையரை இழந்த பதிமூன்று சிறுவர்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

Latest Offers