ஈஸ்டர் தின தாக்குதல்கள் குறித்து அதிகாரிகள் மீது விசாரணைக்கு பரிந்துரை

Report Print Ajith Ajith in சமூகம்

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் மூவரடங்கிய குழு இன்று நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் விளக்கமளித்தது.

அதன் பிரகாரம் உச்ச நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொடா, முன்னாள் பொலிஸ் பிரதம கண்காணிப்பாளர் என்.கே. இலங்ககோன் மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜெயமன்னே ஆகியோரே இன்று சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.

முன்கூட்டியே தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க அதிகாரிகள் தவறியமை குறித்து விசாரணைக்கு உட்படுத்துமாறு அவர்கள் நாடாளுமன்ற தெரிவுகுழுவுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Latest Offers