வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி!

Report Print Steephen Steephen in சமூகம்

குருணாகலில் திருமணமாகி நான்கு வருடங்களின் பின்னர் தனது மனைவி தொடர்பில் இளம் கணவன் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பெண் ஏற்கனவே திருமணமானவர் என்று அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளான இளம் கணவன் அந்த பெண்ணை விவாகரத்து செய்ய வேண்டும் என கோரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

29 வயதான இந்த இளைஞன் வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்துள்ளார். அப்போது அழகிய இளம் பெண் போன்ற தோன்றம் கொண்ட பெண்ணுடன் முகநூலில் பழகி அந்த பெண்ணை காதலித்துள்ளார்.

இலங்கை திரும்பியதும் இளைஞன் அந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். நான்கு ஆண்டுகள் இருவரும் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்துள்ளனர். இந்த நிலையில், பெண் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் கணவனுக்கு தெரியவந்தததையடுத்து குடும்ப வாழ்க்கை சிதறியுள்ளது.

29 வயதான இளைஞன் தனது மனைவி தொடர்பாக மேலும் தகவல்கள் தேடியுள்ளார். மனைவிக்கு 42 வயது எனவும் அவருக்கு 28 வயதான மகளளும் 12 வயதான மகனும் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.

இதனையடுத்து தன்னை ஏமாற்றிய பெண் மனைவி மீது வெறுப்பும், அதிர்ச்சியும் அடைந்த இளைஞன் சம்பவம் குறித்து மாவத்தகமை பொலிஸ் நிலையத்தின் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பெண்ணிடம் இருந்து விவாகரத்து பெற்று தருமாறும் கோரியுள்ளார்.

மாவத்தகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் ஆரியதாசவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் நிலைய பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி நிமாலி இந்திகா தெல்கந்துர சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.