திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற நியூசிலாந்து நாட்டவர் உயிரிழப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த நபரொருவர் இன்று அதிகாலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த குறித்த நபர் தங்கியிருந்த விடுதியின் கட்டிலில் வைத்து மயக்கமுற்றுள்ளார்.

இந்நிலையில், 1990 எனும் இலக்க நோயாளர் காவு வண்டியின் உதவியுடன் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்த வேளை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 89 வயதுடைய என்ரூவ் டெய்னொர் என தெரியவருகின்றது.

இவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.