அம்பாறை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை பாதுகாக்க நடவடிக்கை

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

அம்பாறை - திருக்கோவில், ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்துக்கு முன்பாக நிலவும் கடலரிப்பைத் தடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்துக்கு முன்பாக பாரிய கடலரிப்பு ஏற்பட்டிருந்ததுடன் ஆலய வளாகத்துக்குள் கடல் நீர் உட்புகுந்து வீதியும் சேதமடைந்திருந்தது.

இந்நிலையில் ஆலயத்தைப் பாதுகாக்கும் நோக்கில் தற்போது கற்வேலிகள் அமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன.

கரையோரம் பேணல் மூலவளத் கரையோர முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் தற்போது சுமார் 120 மீற்றர் தூரம் வரை கற்வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் இந்நடவடிக்கை 20 வருடங்களுக்கு கடலரிப்பு ஏற்படாமல் தடுக்கக் கூடியதாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.