நல்லூர் கந்தனை தரிசிக்க சென்றவர் மரணம் - யாழில் நடந்த சோகச் சம்பவம்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் முதியவர் ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் ஆலயத்தில் மின்சாரம் தாக்கியமையினால் 65 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தில் இன்று காலை மின்கசிவு ஏற்பட்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரை உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.