கோத்தபாயவிற்கு ஆதரவாக அம்பாறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள்: மக்கள் மத்தியில் சலசலப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் தற்போது அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாறை - கல்முனை பகுதியில் அரசியல் முக்கியஸ்தர்களின் படம் பொறிக்கப்பட்ட விளம்பர பதாதைகள் அக்கட்சியின் ஆதரவாளர் ஒருவரினால் ஒட்டப்பட்டுள்ளது.

தாமரை மொட்டு இலட்சினையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரது புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட இவ்விளம்பர பதாதைகள் கல்முனை நகர் பகுதி எங்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவை மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி மக்களை விழிப்பூட்டச் செய்வதற்காக இவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்திருக்கும் நிலையில் இவ்விளம்பர பதாதைகள் தீடிரென வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.