முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றம் செய்ய அனுமதி

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையில் நடைமுறையில் உள்ள முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றத்தை செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சரும், நீதியமைச்சரும் இணைந்து இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தனர்.

இதனடிப்படையில், முஸ்லிம் பெண்களின் திருமண வயது 18 என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த திருத்த யோசனையை துரிதமாக சட்டமாக்கவும் அனுமதி கிடைத்துள்ளது.

இலங்கை முஸ்லிம் சமூகத்தில் 18 வயதிற்கும் குறைந்த சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

பால்ய பருவத்தில் உள்ள இந்த சிறுமிகளுக்கு குடும்பம் போன்ற சுமையான விடயங்களை கையாள்வதில் சிரமங்கள் இருப்பதுடன் அது இயற்கைக்கு மாறானது எனவும் சமூகத்தில் பேசப்பட்டது.

இதனால், முஸ்லிம் திருமணச் சட்டத்தில் மாற்றங்களை செய்ய அரசாங்கம் தீர்மானித்தது.