திருகோணமலையில் மீனவர்களின் வலைகளில் சிக்கும் ஜெலி மீன்கள்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை கடற்பரப்பில் கரைவலை தோணி மீனவர்களின் வலைகளில் மற்ற மீன்களுடன் கலந்து ஜெலி மீன்களும் பிடிபடுவதாக தெரியவருகிறது.

குறிப்பாக கீரி மற்றும் பாரைக்குட்டி மீனினங்கள் அதிகளவில் பிடிபடும் போது இந்த வகை மீன்கள் அதிகளவாக பிடிபடுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் குறித்த ஜெலி மீன்களை மற்ற மீன்களில் இருந்தும் வலைகளில் இருந்தும் அப்புறப்படுத்த தாம் பெரும் சிரமங்களுக்கு முகங் கொடுத்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் ஜெலி மீன்கள் திடீரென இவ்வாறு கலந்து பிடிபடுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.