விசேட அதிரடிப்படை அதிகாரி போல் போலியாக நடித்தவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி போல் நடி த்து பொலிஸாரை ஏமாற்றி பெரியளவில் ஹெரோயின் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த எஸ்.டி.எஃப். விகி என்ற புனைப் பெயரில் அழைக்கப்படும் பாதாள உலக குழு உறுப்பினரை தாம் போதைப் பொருளுடன் இன்று கைது செய்ததாக கிரிவுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யக்வில, போகமுவ பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். திருமணமான சில காலம் விசேட அதிரடிப்படையில் கடமையாற்றி வந்துள்ளதுடன் அதில் இருந்து விலகி அமைச்சரவை பாதுகாப்பு பிரிவில் சேவையாற்றி வந்துள்ளார்.

இந்த சந்தேக நபர் கடந்த 2011 ஆம் ஆண்டில் கொலை குற்றத்திற்காகவும் 2015 ஆம் ஆண்டு துப்பாக்கி பிரயோகம் செய்தமை, வெடிக்குண்டை வைத்திருந்தமை உட்பட பல குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பிணையில் விடுதலையானவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

குளியாப்பிட்டி, நாரம்பலை, அனுராதபுரம், உட்பட பல இடங்களுக்கு சந்தேக நபர் ஹெரோயின் போதைப் பொருளை விநியோகித்து வந்துள்ளார். விசேட அதிரடிப்படையின் அடையாள அட்டையின் பிரதியை காண்பித்து பொலிஸாரை ஏமாற்றி நீண்டகாலமாக இந்த குற்றச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Latest Offers