திருகோணமலையில் தாபரிப்பு பணம் செலுத்தாத நபருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலையில் 14 மாதங்களாக 135,000 ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்தாத நபருக்கு பத்து மாதம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் இன்று குறித்தநபரை ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை தேவநகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவருக்கே சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்தநபர் மூன்று பிள்ளைகளுக்கு மாதாந்தம் 9,000 ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்தி வந்த நிலையில் 14 மாதங்களாக 135,000 ரூபாவை தாபரிப்பு பணத்தினை செலுத்தாது தலைமறைவாகியிருந்த நிலையிலே மனைவி உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று குறித்தநபரை ஆஜர்படுத்தியபோதே சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers