வவுனியா குளத்தில் உயிரிழக்கும் மீன்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் வறட்சியுடனான காலநிலை காரணமாக வவுனியா குளத்தின் மீன்கள் உயிரிழக்கின்றன.

வவுனியா குளத்தில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையால் மீன்கள் குளத்தில் இறந்து மிதக்கின்றன.

இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரம் மற்றும் சுவாசம் சம்மந்தமான பிரச்சினைகளும் எழுந்துள்ளன.

நீரில் மீன்கள் இறந்து மிதக்கின்ற போதும் குறித்த குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுவோர் தொடர்ந்தும் தமது மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இக்குளத்து மீனை உண்பவர்களுக்கும் நோய் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது.