களுத்துறை மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

அடுத்த மூன்று வாரங்களுக்கு களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் பிரகாரம் களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வாதுவ, வஸ்கடுவ, கட்டுகுருண்டா, நாகொட, பயகொல, பிலமினவத்த, பம்புவல, பேருவளை, மக்கோன, களுவமோதர, மொரகல்ல, அலுத்கம, தர்கா டவுன் மற்றும் பென்தோட்ட ஆகிய பகுதிகளுக்கே குறைந்த அழுத்தத்தில் நீர் வழங்கப்படும்.

அகலவத்தே புதிய நீர் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கெதீன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் சீர்திருத்த பணி காரணமாகவே இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகிக்கப்படுவதாக நீர் வழங்கல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.