தமிழக மீனவர்கள் நால்வரை கைது செய்த இலங்கை கடற்படை

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை கடற்படையினரால் இன்று தமிழக கடற்றொழிலாளர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இலங்கை கடற்பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் 25-35வயதுக்குட்பட்டவர்கள். கடற்படையினர் இவர்களை யாழ்ப்பாண கடற்றொழில் திணைக்களத்தில் கையளித்துள்ளனர்.