அனுராதபுரத்தில் கேரளா கஞ்சாவுடன் முதியவர் கைது

Report Print Mubarak in சமூகம்

ஒரு கிலோ 60 கிராம் கேரளா கஞ்சாவை தனது வீட்டில் வைத்திருந்த அறுபது வயதுடைய நபர் ஒருவரை இன்று(21) கைது செய்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புத்தேகம, கித்சிறிகம, பகுதியைச் சேர்ந்த நபயொருவரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்நபர் வெளியூர் பிரதேச நபர்கள் மூலம் கேரளா கஞ்சா கொண்டு வரப்பட்டு பிரதேச இளைஞர்களுக்கு விநியோகித்து வருவதாக அனுராதபுரம் மது ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கு அமைய சந்தேக நபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கேரளா கஞ்சா கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.