அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான தகவல்! சம்பளத்தில் ஏற்படவுள்ள அதிகரிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

அனைத்து அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

2020 ஜனவரி முதலாம் திகதி அரச ஊழியர்களின் சம்பளம் 2500 ரூபாய் முதல் 10277 ரூபா வரை அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

5 கட்டங்களாக சம்பள உயர்வு வழங்க எமது அராசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இறுதிக் கட்டத்தின் கீழ் 2020 ஜனவரியில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 2,500 ரூபாவில் இருந்து 10,277 ரூபா வரை அதிகரிக்கப்படும்.

சம்பள முரண்பாட்டை தீர்க்க ஜனாதிபதியினால் விசேட சம்பள மீளாய்வு ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதன் பரிந்துரை அடிப்படையிலான அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் முடிவு வரும் வரை அரச ஊழியர்களுக்கு 2,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களின் கொடுப்பனவையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு தனியார் துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார்துறை சம்பளத்தை அதிகரிக்க எமக்கு உத்தரவிட முடியும். ஆனால் அதனூடாக அவற்றின் வர்த்தக செயற்பாடுகள் வீழ்ச்சி அடைந்து பலர் தொழில் இழக்கலாம். அவற்றுக்கு தடையின்றி செயற்பட இடமளிக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளிக்கும் போது இராஜாங்க அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

Latest Offers

loading...