நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தியாகாத வீடுகளில் குடியேறும் கிராம மக்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - கேப்பாபிலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்களுக்காக வழங்கப்பட்ட 47 நிரந்தர வீடுகளின் நிர்மாணிப்பு பணிகள் இன்னமும் நிறைவிற்கு வரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2017ஆம் ஆண்டு 8ஆம் மாதம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் குறித்த கிராமத்தில் உள்ள 47 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் பிலக்குடியிருப்பு கிரமத்திற்கு என வீடுகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் உள்ளிட்டோர் குறித்த கிராமத்திற்கு சென்று நிரந்தர வீடுகளுக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்திருந்தனர்.

இதையடுத்து, இந்த நிரந்தர வீடுகளை நிர்மாணித்து மக்களுக்கு கையளிக்கும் பொறுப்பு பிலக்குடியிப்பு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு 1 1/2 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்னமும் வீடுகளின் நிர்மாணிப்பு பணிகள் நிறைவிற்கு வரவில்லை என்று அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.