முல்லைத்தீவில் காட்டுயானைகளினால் உயிர் அச்சுறுத்தல்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவில் சில பகுகளிற்குள் புகுந்த காட்டு யானைகளினால் பெரும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவு - உடையார்கட்டு மற்றும் தேராவில் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு புகுந்த காட்டுயானைகள் பெருமளவான பயிர்கள் மற்றும் மரங்களை அழித்துள்ளன.

அத்துடன் பொதுமக்களை யானை விரட்டியுள்ளது. இதனால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த பிரதேசத்தில் யானைவேலிகளை அமைத்துத் தர தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...