வெளிநாடு ஒன்றிலிருந்து இன்று திருப்பி அனுப்பப்பட்ட 60 இலங்கை பெண்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

குவைத் நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்ற 60 பெண்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பல்வேறு துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைக்குள்ளான பெண்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த இலங்கை பெண்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் வந்த பெண்கள் இன்று காலை 6.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers