இறுதி யுத்தத்தில் இவ்வாறுதான் நடந்து கொண்டோம்! புதிய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விளக்கம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

உலகின் இராணுவங்கள் நாட்டு மக்களின் பிரித்து பார்க்கமுடியாத உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஜனநாயக வழிமுறையிலான வாழ்க்கை சூழலை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளன என புதிய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த மக்களை படையினர் மீட்டெடுத்தமை அவர்களது மனிதநேயத்திற்கு சான்று எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாடு எதிர்கொள்ளும் அனைத்து வகையான அச்சுறுத்தல்களில் இருந்தும் நாங்கள் பாதுகாக்கப்போகின்றோம்.

தாய்நாட்டின் இறைமை பிரதேச ஒருமைப்பாடு மற்றும் ஒற்றையாட்சி ஆகியவற்றி9னை பாதுகாப்பதில் இராணுவத்திற்கு இராணுவத் தளபதி என்ற அடிப்படையில் உரிய தலைமைத்துவத்தை வழங்குவேன்.

அனைத்து அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமும் இந்த நாட்டின் அனைத்து மக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.

உலகின் இராணுவங்கள் நாட்டு மக்களின் பிரித்துபார்க்கமுடியாத உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஜனநாயக வழிமுறையிலான வாழ்க்கை சூழலை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளன.

அதேவேளை உள்நாட்டு வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் இராணுவங்கள் உள்ளன.

கடந்த கால மனிதாபிமான நடவடிக்கையின் போது எந்த நாடும் ஏற்றுக்கொள்ளகூடிய இந்த வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்றினோம். இறுதி யுத்த காலத்தில் சர்வதேச மனிதாபிமான மற்றும் உரிமைகளை பின்பற்றியே நாங்கள் நடந்துகொண்டோம்.

யுத்தத்தின் போது பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த மக்களை படையினர் மீட்டெடுத்தமை அவர்களது மனிதநேயத்திற்கு சான்று என குறிப்பிட்டுள்ளார்.