1 கோடி ரூபாய் காப்பீடு தொகையை இன்னும் வழங்கவில்லை! வர்த்தக நிலைய உரிமையாளர் கவலை

Report Print Theesan in சமூகம்

தீ விபத்தினால் எரிந்து சேதமடைந்த தமது வியாபார நிலையத்திற்கு இதுவரை காலமும் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை என வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி வவுனியா கண்டி வீதியிலுள்ள பிரபல்யமான வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

இதன்போது, வியாபார நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான தளபாடப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த வியாபார நிலையம் கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

வவுனியா பொலிஸ் அறிக்கை, இலங்கை மின்சார சபையின் அறிக்கை ஊடாக இந்த தீ விபத்து மின் ஒழுக்கினால் இடம்பெற்றுள்ளதாக காப்பீடு நிறுவனத்திற்கும் வியாபார நிலைய உரிமையாளருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வியாபார நிலையம் ஒரு கோடி 7,000,000 ரூபாவிற்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன் 1 கோடி 2,863,050 ரூபாயிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டு எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இவ்வியாபார நிலையத்திற்கான இழப்பீட்டு நிதி இன்று வரையிலும் வழங்கப்படவில்லை என வியாபார நிலைய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த காப்புறுதி நிறுவனம் தனக்கான காப்பீட்டு நிதியை வழங்க காலதாமதம் ஏற்படுத்தி வருகின்றதாகவும், இதன் காரணமாக வர்த்தக நிலையத்தின் இழப்புக்களை ஈடு செய்து கொள்ள முடியாமல் இருப்பதாகவும் வியாபர நிலையத்தின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...